செய்தி விவரங்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் நான் இல்லை;கை கழுவிய மஹிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் நான் இல்லை;கை கழுவிய மஹிந்த 

முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தலைமை வகிக்கும் மற்றும் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்சவின் ஆலோசனையில் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் தாம் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு நேற்று வியாழக்கிழமை இரவு அளித்த செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தற்காலிகமாக பிரிந்த 55 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து அமைக்கப்பட்ட ஒன்றிணைந்த எதிர்கட்சியின் தலைமையை வகித்து வருகின்றார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.

இதனிடையே உள்ளூராட்சி சபைக்கான தேர்தலை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைத்துவத்தையும் அவரே கொண்டிருப்பதாக பேசப்படுகிறது.

இதனை மையமாகக் கொண்டு எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தாம் ஒருபோதும் அக்கட்சியின் தலைவர் பதவியை ஏற்கவில்லை என்று குறிப்பிட்டார்.

அத்தோடு தேர்தலில் பெருவெற்றி பெற்றாலும் ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது சுதந்திரக் கட்சியுடனோ ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இணையாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்திருக்கின்றார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு