செய்தி விவரங்கள்

டாஸ்மாக் கடைகள் விவகாரம் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!!

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டிய 500 மீட்டர் தூரத்துக்கு உள்ள டாஸ்மாக் கடைகளை மார்ச் 31 ஆம் தேதிக்குள் அகற்றவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையடுத்து தமிழகத்தில் இருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

டாஸ்மாக் கடைகள் விவகாரம் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!!

இந்நிலையில், தமிழக அரசு மூடப்பட்ட கடைகளைத் திறக்கும் பணியில் ஈடுபட்டது. இதற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவியது. அதனால், தேசிய நெடுஞ்சாலைகள் எனும் பெயரை ஊரக சாலைகள் என்று பெயர் மாற்றம் செய்து டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில் தேசிய நெடுஞ்சாலைகள் எனும் பெயரை ஊரக சாலைகள் என பெயர் மாற்றி டாஸ்மாக் கடைகளை திறந்துகொள்ளலாம் என நேற்று தெரிவித்திருந்தது உச்ச நீதிமன்றம்.

சண்டிகர் தொடர்பாக ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு இந்தியா முழுவதற்கும் பொருந்தும் என்றும், இது தொடர்பாக விரைவில் எழுத்து வடிவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த விசாரணையின் போது, உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டதன் பேரிலேயே வழக்கு தொடர்ந்ததாக தமிழக அரசு கூறியது.

டாஸ்மாக் கடைகள் விவகாரம் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!!

இந்நிலையில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த விளக்கத்திற்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு கண்டனம் தெரிவித்துள்ளது. தனது சந்தேகம் தொடர்பாக விளக்கம் கேட்டு விட்டு, உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது பொறுப்பற்ற செயல் என உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு