செய்தி விவரங்கள்

ஹெரோயின் ரொபியை விழுங்கிய இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது!

யாழில் ஹெரோயின் ரொபி வைத்திருந்த இரு இளைஞர்கள் யாழ்ப்பாணப் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கையில் வைத்திருந்த ஹெரோயின் ரொபியை வாய்க்குள் திணித்து விழுங்கிய நிலையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இரு இளைஞர்கள் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றுள்ளனர். அவர்களுக்கு அருகில் சென்ற பொலிஸார் அவர்களை சோதனை செய்ய முயன்ற போது கைகளில் வைத்திருந்த ஹெரோயின் ரொபியை வாய்க்குள் போட்டு விழுங்கியுள்ளனர்.

உடனடியாக இருவரையும் கைது செய்த பொலிஸார் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் நல்லூர் பகுதியை சேர்ந்த 23, 24 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு