செய்தி விவரங்கள்

குமரியில் ஆளுநர் திடீர் ஆய்வு… தொடர்ந்து அமைதிகாக்கும் தமிழக அரசு

குமரியில் ஆளுநர் திடீர் ஆய்வு… தொடர்ந்து அமைதிகாக்கும் தமிழக அரசு

கன்னியகுமரி மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஒகி புயல் காரணமாக கடும் பாதிப்புகளை சந்தித்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

சாலைகளை சீரமைக்கப்பட்டு மின் விநியோகம் தடையில்லாமல் வழங்க மாவட்ட நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மீட்பு பணிகளை பார்வையிட்டார்.

பின்னர் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பன்வாரிலால் புரோகித் மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. நெல்லை மாவட்டத்தை தொடர்ந்து கன்னியாகுமரியில் ஆளுநர் ஆய்வு நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு