செய்தி விவரங்கள்

உயர்தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓர் மகிழ்ச்சியான செய்தி..!

உயர்தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் கணினிகளை பெற்றுக்கொடுக்கும் அரசாங்கத்தின் செயற்திட்டம் அடுத்த கல்வி தவணை ஆரம்பத்தில் முன்னெடுக்கப்டவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற ஒதுக்கீடுகளின் படி இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கமைய 1 லட்சத்து 75 ஆயிரம் மாணவர்களுக்கும் 28 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் இந்த டெப் கணினிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டெப் கணினிகள் ஊடாக பாட விதானத்துக்கு உட்பட்டதும், அமைச்சினால் அங்கிகரிக்கப்பட்ட இணையதள முகவரிகளுக்குள் சென்று கல்விசார் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அதற்கு ஏற்ற வகையில் கல்வியமைச்சின் வலைதளமும் சீரமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு