செய்தி விவரங்கள்

மலேசியாவில் இருந்து கடத்தி வந்த தங்கம் பறிமுதல்

மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு கடத்தப்பட்ட தங்க பிஸ்கட்டுகள் சென்னை விமான நிலைய அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மலேசியாவின் கோலலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசிய விமானம் நேற்றுமுன்தினம் இரவு 12 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் வழமையான சோதனை நடவடிக்கைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இந்நிலையில் திருச்சியை சேர்ந்த நபர் ஒருவர் மலேசியாவிற்கு சுற்றுலா சென்று திரும்பியிருந்த நிலையில் அவரை சோதனையிட்ட போதே தலா 100 கிராம் எடை கொண்ட 18 தங்க பிஸ்கட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதன் சர்வதேச மதிப்பு 54 லட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.இதையடுத்து சுங்க அதிகாரிகள், அவரை கைது செய்து, தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

சோதனை முடிந்து வெளியேற முயன்ற இவரிடம் இந்த பார்சல் எப்படி வந்தது என்பதை அறிய கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

அப்போது, விமான நிலைய தற்காலிக பணியாளர் சுங்க சோதனை முடிந்து சென்றபோது, அவரிடம் கருப்பு பார்சலை கொடுத்தது பதிவாகி இருந்தது.

இந்நிலையில் விமான நிலைய ஊழியரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது.ஐகதானவர் சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்றும்  ஏற்கனவே, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய் மற்றும் அபுதாபி உள்பட பல நாடுகளுக்கு அடிக்கடி சுற்றுலா விசாவில் சென்று வருவது தெரியவந்துள்ளது.

அப்போதெல்லாம் தங்கம் கடத்தி வந்திருக்கலாம், இவருக்கு தற்காலிக பணியாளர்கள் உதவி செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு