செய்தி விவரங்கள்

செட்டிகுளம் பிரதேச சபையில் சுதந்திர கட்சி ஆட்சியமைப்பு!

செட்டிகுளம் பிரதேச சபையில் சுதந்திர கட்சி ஆட்சியமைப்பு!

வென்கலச்செட்டிக்குளம் பிரதேச சபையை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றின.

செட்டிக்குளப்பிரதேசசபையில் இன்றையதினம் (16-04-2018) திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற தவிசாளர், பிரதிதவிசாளர் தெரிவின்போது தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்த ஆசீர்வாதம் அந்தோனிப்பிள்ளை 7 வாக்குகளைப்பெற்று தெரிவு செய்யப்பட்டார்.

ஸ்ரீலங்காசுதந்திரக்கட்சியின் 4 வாக்குகளும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இரண்டு வாக்குகளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஒரு வாக்கும் இவருக்கு கிடைக்கப்பெற்றன.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஜெகதீஸ்வரனுக்கு 6 வாக்குகளும், தமிழர் விடுதலைக் கூட்டணியை சேர்ந்த டெல்சனுக்கு 3 வாக்குகளும் கிடைத்தன.

செட்டிகுளம் பிரதேச சபையில் சுதந்திர கட்சி ஆட்சியமைப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஜெகதீஸ்வரனுக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் வாக்களித்தது.

பிரதித்தவிசாளர் தெரிவில் அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த நவரட்ணம் சிவாஜினி 7 வாக்குகளைப்பெற்று வெற்றிபெற்றார்.

இவருக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 4 வாக்குகளும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 2 வாக்குகளும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 1 வாக்கும் கிடைக்கப்பெற்றன.

இந்நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமிழ்ப்பெண் உறுப்பினரை பிரதி தவிசாளராக ஆக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு