செய்தி விவரங்கள்

ஏமாந்ததில் நீங்களும் ஒருவரா ? ஜாக்கிரதை ஆபிரிக்கர்கள் பணம் பறிக்கிறார்கள் .

முகநூல் சமூக மீடியாவை வைத்து, பலரிடம் பெருந்தொகைப் பணத்தை கையாடிய பலரை கொழும்பு பொலிஸ் புலானாய்வு பிரிவினர் வலைவிரித்து கைதுசெய்ய ஆரம்பித்துள்ளனர் .

ஆரம்ப விசாரணைகளின் முடிவில் வெளிநாட்டவர்கள் , இலங்கையரிடம் பெருந்தொகையான பணத்தை அபகரித்துள்ளமை தெரிய வந்துள்ளது .

இலங்கையர்களிடம் 50,000,000 தொகைக்கு மேற்பட்ட தொகையை அபகரித்துள்ள 25உகண்டா , நைஜீரிய நாட்டவர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் .

இப்படி ஏமாற்றப்பட்ட இலங்கையர்களுள் ஆண்களும் பெண்களும் உள்ளடக்கம்  என்று அறியப்படுகின்றது .

பெரிய தொகை பரிசுப் பணத்தை வென்றுவிட்டதாகவும் , இதைப்பெற முற்பணமாக ஒரு தொகை செலுத்த வேண்டுமென்று சொல்லி சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆசை காட்டி பணம் கறந்துள்ளார்கள்,

இப்படியான விடயங்களில் இனியும் ஏமாற வேண்டாமென , பொலிசார் பொதுமக்களை எச்சரித்து உள்ளமை  இங்கே குறிப்பிடத்தக்கது

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு