செய்தி விவரங்கள்

ஸ்ரீலங்காவுக்கான வெளிநாட்டு நிதியுதவி அதிகரிப்பு

ஸ்ரீலங்காவுக்கான  வெளிநாட்டு நிதியுதவி அதிகரிப்பு

ஸ்ரீலங்காவுக்கு வெளிநாடுகளிலிருந்து வழங்கப்படும் நிதியுதவியின் அளவு அதிகரித்துள்ளது.

இதற்கமைய நடப்பு ஆண்டின் முதல் நான்கு மாத காலப்பகுதியில் மாத்திரம், 24 கோடி 40 இலட்சம் அமெரிக்க டொலருக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதில் 17 கோடி அமெரிக்க டொலர்களுக்கான கடன் உடன்படிக்கையும் இடம்பெற்றுள்ளதுடன் எஞ்சியவை நேரடி முதலீடாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருதரப்பு மற்றும் பலதரப்பு என்ற ரீதியில் இந்த நிதியுதவி கிடைத்துள்ளதாகவும், அதிகூடிய அளவிலான நிதியுதவியை உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்திப் பிரிவு வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இதன் பெறுமதி 12 கோடி அமெரிக்க டொலர்களாகும் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பெறப்பட்ட நிதியுதவியில் அதிகளவானவை விவசாய அபிவிருத்திகாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழ் செய்திகளுக்கு ...

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு