செய்தி விவரங்கள்

பிரித்தானியாவில் கடத்தல் கும்பலுக்காக கடத்தப்பட்ட இலங்கை அகதிகள்!

பிரித்தானியாவில் கடத்தல் கும்பலுக்காக கடத்தப்பட்ட இலங்கை அகதிகள்!

பிரித்தானியாவுக்குள் Calais துறைமுகம் வழியாக அகதிகள் நுழைவது கடினமாகி விட்டபடியால் Caen துறைமுகம் வழியாக அகதிகள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளதாக பிரித்தானிய பாரவுந்து ஓட்டுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆபத்தான கடத்தல் கும்பல்களுக்காகவே இந்தக் கடத்தல் நடந்துவருவதாக இந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அண்மையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Issa Kebe என்னும் நபர் இரண்டு இலங்கை குடிமக்களை Portsmouth துறைமுகம் வழியாக பிரித்தானியாவுக்குள் கடத்திக் கொண்டு வரும்போது அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார். குறித்த நபரின் வாகனத்தைச் சோதனையிட்ட அதிகாரிகள் அங்கே இரண்டு நபர்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதுகண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பிரித்தானியாவில் கடத்தல் கும்பலுக்காக கடத்தப்பட்ட இலங்கை அகதிகள்!

இதனையடுத்து குறித்த நபரைக் கைதுசெய்த பொலிஸார் Portsmouth Crown நீதிமன்றத்தில் முற்படுத்தி விசாரித்தபோது குறித்த சந்தேக நபர் கூறிய காரணம் அதிர்ச்சிமிக்கதாய் அமைந்தது. அதாவது, தான் ஒரு கடத்தல் கும்பலிடம் கடன் வாங்கியதாகவும், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் குறித்த நபர்களைக் கடத்தி அந்தக் கும்பலிடம் ஒப்படைக்க முயன்றதாகவும் கூறியுள்ளார்.

சம்பவத்தில் கடத்தப்பட்ட இரண்டு அகதிகளும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட பாரவூர்தி ஓட்டுநருக்கு  மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு