செய்தி விவரங்கள்

ஆம்பூர் வாசன் கண் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து!

ஆம்பூர் அருகே வாசன் கண்மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் மின்சாதன பொருட்கள் மற்றும் ஆவணங்கள் தீயில் கருகி சாம்பலானது.

ஆம்பூர் வாசன் கண் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து!

வேலூர் மாவட்டம் ஆம்பூர் புறவழி சாலையில் இயங்கிவரும்  வாசன் கண்மருத்துவமனையில், இன்று காலை முதல் தளத்தில் உள்ள பொருட்கள் சேமித்து வைக்கும் ஒரு அறையில் மின்கசிவு ஏற்பட்டு புகை மூட்டத்துடன்  திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர் தீயானது மற்றொரு அறைக்கும் மளமளவென பரவி மருத்துவமனை முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. இதை அறிந்த ஊழியர்கள் மற்றும் சிகிசைக்கு வந்த நோயாளிகள் அலறியடித்து மருத்துவமனையை விட்டு வெளியேறினர்.

ஆம்பூர் வாசன் கண் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து!

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் தீயணைப்பு துறையினர் மருத்துவமனை அமைந்துள்ள வணிக வளாகம் முழுவதிலும் மின்சாரத்தை துண்டித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். நீண்ட நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்களை வெளியேற்றி தீயை அணைத்தனர்.

தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சியால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் மருத்துவமனையில் இருந்த மின்சாதன பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் கருகி சாம்பலானது. தற்போது இச்சம்பவம் குறித்து ஆம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு