செய்தி விவரங்கள்

2018 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் செப்டம்பர் இறுதியில்

2018 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை இவ்வருடம் செப்டெம்பர் மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் கொள்கை மற்றும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் 2018 – 2020 ஆம் ஆண்டு வரையிலான இடைக்கால பகுதிக்கான வரவு செலவுக் கட்டமைப்பை அடிப்படையாக எடுத்துக்கொள்ளக்கூடிய மொத்த வளத்தை கவனத்திற்கொண்டு திறைசேரியினால் இந்த வரவுசெலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அமைச்சுக்கள், மாகாணசபைகள் ஆகியவற்றுடன் மேற்கொள்ளப்பட்ட வரவுசெலவுத்திட்ட கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைவாக 2018 ஆம் நிதியாண்டிற்காக அரசாங்கத்தின் மொத்த செலவு 3 ஆயிரத்து 982 பில்லியன் ரூபாவாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தொகையில் அரசாங்கம் மீளசெலுத்த வேண்டிய கடன், விதவைகள் அனர்த்த நிதியத்திற்கான நிதி ஆகியன தற்பொழுது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதற்கான சட்டத்தின் கீழ் செலவிடப்படவுள்ள தொகை 2005 தசம் 1 பில்லியன் ரூபா என்பதனால் இந்த செலவு தவிர்ந்த இந்த மொத்த செலவில் 1977 பில்லியன் ரூபாவை செலவிடுவதற்காக உத்தேச ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் மூலம் அதற்கான அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.

இதில் 2018 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் புனர்வாழ்வு செலவாக 1308 தசம் 9 பில்லியன் ரூபாவும் மொத்த செலவாக 668 பில்லியன் ரூபாவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இவ்வருடத்தில் எதிர்பார்க்கப்பட்டுள்ள அரசாங்க வருமானம் மற்றும் வெளிநாட்டு வருமானத்தை சேர்க்கும்பொழுது அத்தொகை 2175 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2018 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்களசமரவீர அமைச்சரவையில் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு