செய்தி விவரங்கள்

மாத்தறையில் வீடொன்றில் இருந்து நான்கு பேரின் சடலங்கள் மீட்பு

மாத்தறை கம்புறுப்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மூன்று பிள்ளைகள் அடங்கலாக நால்வரின் சடலங்களை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.

குறித்த பிள்ளைகளின் தந்தை வீட்டின் கூரையில் தூக்கிட்டு தொங்கிய நிலையில்   சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் உடல்களில் எரிகாயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

16, 14 மற்றும் 10 வயதான பிள்ளைகளே உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் இருவர் பெண் பிள்ளைகள் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு