செய்தி விவரங்கள்

தந்தையால் மகனுக்கு நேர்ந்த விபரீதம்! முல்லைத்தீவில் சம்பவம்!

தந்தையால் மகனுக்கு நேர்ந்த விபரீதம்! முல்லைத்தீவில் சம்பவம்!

முல்லைத்தீவின் மாங்குளம் நீதிபுரம் பகுதியில் தந்தையால் தாக்கப்பட்ட சிறுவன் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுவனின் இரு கால்களும் முறிந்த நிலையில் கை, முகம், முதுகு பகுதிகளில் பலத்த காயங்கள் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

12 வயதுடைய கே.இசைப்பிரியன் என்ற சிறுவனே இவ்வாறு தந்தையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

குறித்த சிறுவன் கடந்த சில நாட்களாக வீட்டிற்கு செல்லாமல் உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டிற்கு சென்ற சிறுவனை அவரது தந்தை கடுமையாக தாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு