செய்தி விவரங்கள்

போலி நாணயத்தாள்களை கொடுத்து எரிபொருள் நிரப்பியவா்கள் கைது!

போலி நாணயத்தாள்களை கொடுத்து எரிபொருள் நிரப்பியவா்கள் கைது!

போலி நாணயத்தாள்களுடன் நான்கு பேர் கடந்த சனிக்கிழமை(28-04-2018) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

பொலநறுவை சுங்காவில் பகுதியைச் சேர்ந்த 18 வயது தொடக்கம் 26 வயதுக்குட்பட்ட நான்கு பேரே ஐந்தாயிரம் ரூபாய் போலியான பதினொரு நாயணத்தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓட்டமாவடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோட்டர் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்பி விட்டு நாணயத்தாளை வழங்கும் போது, குறித்த நாணயத்தாள் போலி என ஊழியர் அறிந்துகொண்டதையடுத்து பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி நாணயத்தாள்களை கொடுத்து எரிபொருள் நிரப்பியவா்கள் கைது!

இதேவேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போது குறித்த சந்தேக நபர்கள் ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாள்களை வாயில் போட்டு மென்றுதின்ன முற்பட்ட வுளை பொலிஸார் பணத்தினை பறிமுதல் செய்துள்ளனா்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு