செய்தி விவரங்கள்

அழகிப்போட்டிக்கு தயாராக , இலங்கை வந்துள்ள அழகிகள் கூட்டம்

அடுத்த மாதம் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள மிஸ் இங்கிலாந்து, இறுதிச் சுற்றுப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கு முன்பாக , தம்மைத் தயார்படுத்திக் கொள்ள, இந்த அழகிகள் இலங்கை வந்திறங்கி உள்ளார்கள்.

அடுத்த மாதம் இங்கிலாந்தின் பல பகுதிகளிலும் இருந்து பங்குபற்றும் மிஸ் 2017அழகித் தேர்வு பெர்மிங்க்ஹாம்  என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது . இந்த நிகழ்வு ஜூலை 11 அன்று இடம்பெறும். அதற்கு முன்பு இலங்கை வந்துள்ள இந்த அழகிகள் , இங்கு இரு வாரங்கள் தங்கியிருந்து , கடற்கரை படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார்கள் என்று சொல்லப்படுகின்றது,

மிஸ் இங்கிலாந்து பட்டத்தை வெல்பவர் , மிஸ் ஸ்காட்லாந்து , மிஸ் வேல்ஸ் ,மிஸ் வட அயர்லாந்து ஆகியோருடன் இணைந்து மிஸ் வேர்ல்ட் போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

மிஸ் வேர்ல்ட் போட்டிகளில் முதல் பரிசாக 100,000டொலர் தொகை வழங்கப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு