செய்தி விவரங்கள்

சாவகச்சேரி, பருத்துறை நகர சபைகளை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கைப்பற்றியது

நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சவகச்சேரி, பருத்துறை நகர சபைகளை சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி (தமிழ்தேசிய பேரவை) கைப்பற்றியுள்ளது.

இந்த தகவலை தேர்தல்கள் ஆணைக்குழு இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் தேர்தல் நடவடிக்கைக்குழு அதிகாரிகளை மேற்கோள்காட்டி எமது பிரதேச செய்தியாளர்கள் கூறியுள்ளனர்.

பருத்துறை நகர சபையில் ஆறு வட்டாரங்களையும் சாவகச்சேரில் ஐந்து வட்டாரங்களையும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கைப்பற்றியுள்ளதாக பிரதேச செய்தியாளர்கள் கூறியுள்ளனர்.

அதேவேளை இந்த இரண்டு சபைகளையும் தமது முன்னணி கைப்பற்றியுள்ளதாக முன்னணியின் யாழ் மாநகர சபை மேயர் வேட்பாளர் மணிவன்னன் ஐ.பி.சி.தமிழ் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை யாழ் மாநகர சபை தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னணியில் உள்ளதாகவும் பிரதேச செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு முன்னிலையில் உள்ளதாகவும் பிரதேச செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு