செய்தி விவரங்கள்

இரணைதீவு மக்களை சந்தித்த ஈ.பி.டி.பியின் மாகாண உறுப்பினர்

தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இரணை தீவு மக்களை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாகாணசபை உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளருமான வை.தவநாதன் தலைமையிலான குழுவினர் சந்தித்துள்ளனர்.

இரணைதீவு மக்களை சந்தித்த ஈ.பி.டி.பியின் மாகாண உறுப்பினர்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தேவையான ஒரு தொகுதி உணவு இதன்போது கைளிக்கபட்டுள்ளது.

நாட்டில் யுத்தம் இடம்பெற்ற போது, இலங்கை படையினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு கோரி வட மாகாணத்தில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் கிளிநொச்சி – இரணைதீவில் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் ஒரு வருடத்தை தாண்டிய நிலையில் தீர்வின்றி தொடர்கின்றது.

எனினும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் இணைதீவு மக்கள் கடந்த 23 ஆம் திகதி  இரணைத்தீவுக்கு சென்று அங்கு தங்கியிருந்து 08ஆவது நாளாக இன்று திங்கட்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன் தலைமையிலான குழுவினர் நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இரணைதீவு மக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பில் தொடர்ச்சியாக நாடாளுமன்றில் வலியுறுத்த வருவதாக தவநாதன் தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாகாண மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின்  நிதி பங்களிப்பில் 5 இலட்சம் ரூபா நிதி இரணைதீவின் அபிவிருத்தி பணிகளுக்காக வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு