செய்தி விவரங்கள்

உறவினா்களுடன் கடலில் குளித்துகொண்டிருந்தவருக்கு நோ்ந்த விபரீதம்!

உறவினா்களுடன் கடலில் குளித்துகொண்டிருந்தவருக்கு நோ்ந்த விபரீதம்!

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லங்காப்பட்டுண கடல் பகுதியில் உறவினர்கள் ,நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் நேற்றையதினம் (15-04-2018) ஞாயிற்றுக்கிழமை சம்பவித்துள்ளது.இதில் 45 வயதான சேருநுவர பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளாா்.

விடுமுறை தினமென்பதால் குறித்த நபர் லங்காப்பட்டுண கடலுக்குச் சென்று நீராடி பொழுதை போக்கிக் கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம் பெற்றதாகவும், இவர் கடலில் நீராடும் போது அதிக மது போதையில் காணப்பட்டதாகவும் பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை லங்காப்பட்டுண கடற்படையினர் சடலத்தை மீட்டு சேருநுவர பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன், வைத்திய சாலைக்கு இன்றையதினம் திங்கட்கிழமை (16-04-2018) காலை சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேத பாரிசோதனைக்கு சடலத்தை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறும் சேருநுவர பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு