செய்தி விவரங்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் வடமராட்சி  பகுதியில்  ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் நாளை வியாழக்கிழமை காலை இடம்பெறவுள்ளதாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இறுதிக்கட்ட யுத்ததின் போதும் அதற்கு பின்னரும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட மற்றும் இராணவத்தினரால் கடத்தப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன்படி கிளிநொச்சிமுல்லைத்தீவுவவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அந்தவகையில் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தின் முன்பாக காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் எந்தவித தீர்வும் இன்றி தொடரும் நிலையில் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு நாளை பாரிய போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

அதேவேளைகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவொரு முடிவினையும் அறிவிக்காத நிலையில்இராணுவத்தினரிடம் ஒப்படைத்த தமது பிள்ளைகள் தமக்கு தேவையென அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு