செய்தி விவரங்கள்

போலி நாணயத் தாள்களுடன் ஐவர் கைது

போலிநாணயத்தாள்கள் வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் 5 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் ரூபா 5 ஆயிரத்தினை கொடுத்து மதுபானம் கொள்வனவு செய்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசாருக்குக் கிடைத்த தகவலையடுத்தே பொலிசார் சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவரிடம் இருந்து 5ஆயிரம் ரூபா போலி நாணயத் தாள்கள் 12இனை, கைப்பற்றியதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து, சந்தேகநபரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது அவருக்கு போலி நாணயங்களை வழங்கிய நால்வர் குறித்த தகவல்களை தனது முறைப்பாட்டில் வழங்கினார்.

இதன்படி, 127, ஐந்தாயிரம் ரூபா  போலிநாணயத் தாள்களுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் போது சந்தேக நபர்கள் மதுகம, குப்புக்கெடே மற்றும் வெரலபனாதர ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்று மதுகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு