செய்தி விவரங்கள்

வீடு புகுந்து சுட்டவருடன் எதிர்த்து மோதிய தம்பதி: ஒருவர் படுகாயம்!

ஸ்ரீலங்காவின் பத்தேகம-கொடவத்த தெற்கு பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் புகுந்து ஆயுத தாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் பத்தேகம நீதவான் நீதிமன்றின் பின்புறத்தில் உள்ள வீட்டிலே இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிதாரி, பூட்டப்பட்டிருந்த கதவினை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று உறங்கிக் கொண்டிருந்த வீட்டு உரிமையாளரைச் சுட்டு விட்டு, தப்பிச் செல்வதற்கு முயன்றுள்ளார். ஆனாலும் சூட்டுக்கு இலக்கான நபர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் துப்பாக்கிதாரியுடன் சண்டையிட்டுள்ளனர். இந்தச் சண்டையின்போது சூட்டுக்கிலக்கானவரின் மனைவி கடினமான பொருள் ஒன்றினால் குறித்த நபரைத் தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் காயமடைந்த குறித்த நபர் தான் கொண்டுவந்த துப்பாக்கியினைப் போட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். 

 

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் தற்போது முச்சக்கரவண்டி ஓட்டுநராக இருந்தாலும், அவர் ஒரு முன்னாள் கடற்படை உறுப்பினர் என்று சொல்லப்படுகிறது. தற்பொழுது கராப்பிட்டிய வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

துப்பாக்கிச் சூடு குறித்த காரணம் தெரியவில்லையாயினும், குறித்த சம்பவம் தொடர்பான விசாரணகளை பத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு