செய்தி விவரங்கள்

உடைந்து விழுந்த பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கூரை! காரணம் இதுதான்!

உடைந்து விழுந்த பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கூரை! காரணம் இதுதான்!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள குடிவரவு அலுவலகத்தின் ஒருபகுதி உட்கூரையானது உடைந்து விழுந்துள்ளது.

கடும் மழை காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் விமான நிலைய அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில் 'இதுவரை செயல்பட்டு வந்த 10 குடிவரவு அலுவலகங்களில் 3 பிரிவுகளை மறுசீரமைப்பு காரணமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கடும் மழை காலங்களில் இதற்கு முன்னரும் குடிவரவு அலுவலகங்களில் உள்ள உட்கூரையானது பல முறை உடைந்து விழுந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இருப்பினும் நிர்ந்தர தீர்வுக்கு இதுவரை அதிகாரிகளால் எட்ட முடியவில்லை என கூறப்படுகிறது.

இது போன்ற செயல்கள் நாட்டின் சுற்றுலா வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உடைந்து விழுந்த பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கூரை! காரணம் இதுதான்!

உடைந்து விழுந்த பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கூரை! காரணம் இதுதான்!

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு