செய்தி விவரங்கள்

கைகோர்க்கும் கொக்கோகோலா நிறுவனமும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கமும்

இலங்கை , கம்பகாவில்  உள்ள செஞ்சிலுவைச் சங்க கிளை அமைப்பும் , இங்குள்ள கோலா நிறுவனமும் , இந்த வருடம்  மே மாதம் ஏற்பட்ட வெள்ள அனர்த்த அவசரப்  பணிகளை கூட்டாகச் செய்வதில் ஓர்  இணக்கம் கண்டுள்ளன . பியாகம , டோம்பே பிரதேசங்களில் அவசரமாகத் தேவைப்படும் பாதுகாப்பான , சுத்தமான குடி நீரை வழங்குவதையும் , மருத்துவ சேவைக்கான கூடாரங்களை நிறுவுவதையும்  கோலா நிறுவனம்  பொறுப்பேற்று இருக்கின்றது .

அவசரகால நிவாரணப் பணிகள்  பிரதானமாக வெள்ளத்தால்  பெருதும் பாதிக்கப்பட்ட  டோம்பே பிரதேசத்தில் உள்ள குறிப்பிட்ட இடங்களிலேயே இடம்பெற்றுள்ளன . மேலதிகமாக  இந்த மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையாமல்  இருக்க , பியாகம பிரிவில்  மொத்தமாக  600 மாசுபட்ட கிணறுகளை  சுத்தம் செய்து கொடுக்கும் பணியையும் இந்த நிறுவனம் பொறுப்பெடுத்து இருந்தது .

பியாகம சுகாதார அதிகாரி குமாரி விஜயசூரிய  இதுபற்றி கருத்து தெரிவிக்கையில் “ சமீபத்தில் இடம்பெற்ற  வெள்ள அனர்த்தம் பெரும் அழிவையும் இழப்பையும் ஏற்படுத்தி உள்ளது . குறிப்பாக பியாகமவின் பல பகுதிகள்  பெரும் பாதிப்பைக் கண்டுள்ளன . இந்த விடயத்தில் , இப்படியொரு இகட்டான நிலையில் கோலா நிறுவனம் ஆற்றிய உதவி பேருதவி ஆகும் “ என்று குறிப்பிட்டுள்ளார் .

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு