செய்தி விவரங்கள்

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட 3 ஆம் 4 ஆம் வருட மாணவர்களுக்கு வகுப்பு தடை

யாழ் பல்கலைக்கழக  கலைப்பீட 3 ஆம்  4 ஆம் வருட மாணவர்களுக்கு வகுப்பு தடை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை இராமநாதன் நுண்கலை தவிர்ந்த, கலைப்பீடத்தின் 3 ஆம் மற்றும் 4 ஆம் வருட மாணவர்கள் பல்கலைக்கழக பகுதிகளில் உள்நுழைவதற்கு தடை செய்யப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

அத்துடன் கலைப்பீடத்தின் 3 ஆம் மற்றும் 4 ஆம் வருட மாணவர்களுக்கு மறு அறிவித்தல் வரை வகுப்புத் தடை விதிக்கப்படடுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இதனால் குறித்த மாணவர்களை உடனடியாக பிரதான வளாகம் மற்றும் மாணவர் விடுதிகளிலிருந்து இன்று வெளியேறுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

எனினும் முதலாம் மற்றும் இரண்டாம் வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, நேற்று பிற்பகல் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட 3 ஆம் மற்றும் 4 ஆம் வருட மாணவர்களுக்கு இடையே இடம்பெற்ற மோதல் காரணமாக மூன்று மாணவர்கள் காயமடைந்த நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

   

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு