செய்தி விவரங்கள்

குடும்பத்தவர்களை காப்பாற்றி எரிந்த காருக்குள் கருகிய தந்தை

வீதியில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்ததில் பெங்களூருவைச் சேர்ந்த திலீப் உடல் கருகி உயிர் இழந்தார்.

கோவை பைபாஸ் சாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த திலீப்குமார்  தன் குடும்பத்தாருடன் காரில் கொச்சி சென்று விட்டு பெங்களூருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் அவரது கார் கோவை பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

உடனே சுதாரித்த தீலிப் தன் குடும்பத்தினரை காரில் இருந்து அவசரம் அவசரமாக வெளியேற்றினார்.

இதனால் அவர்களுக்கு எந்த சிறு காயமும் ஏற்படவில்லை.ஆனால் திலீப் சீல்ட் பெல்ட் அணிந்திருந்த காரணத்தால் எவ்வளவு முயன்றும் அவரால் உடனே இறங்கமுடியவில்லை.

இந்த நேரத்தில் குடும்பத்தினர் கண்முன்னே திலீப் நெருப்பில் கருகி இறந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு