செய்தி விவரங்கள்

கண்ணியமான வாழ்க்கைக்கு கனடாவே முதலிடம்- ஓர் அலசல்...!!!

ஒரு குறிப்பிட்ட இடம், மனிதன் வாழ உகந்த இடமாக வேண்டும் எனில் அதில் பல அம்சங்கள் ஒன்று சேர்ந்து அமைந்திடல் வேண்டும். ஒரு நாட்டில் மனிதர்களின், சிறப்பான மகிழ்ச்சியான சுமூகமான வாழ்விற்கு இடமளிக்க வேண்டுமெனில் அந்நாட்டில் வீடு கட்டமைப்புகள், சுற்று சூழல் பாதுகாப்பு, தனிமனித பாதுகாப்பு, சுகாதார நிலை, வருமானம் மற்றும் வளங்கள், சமூக இணைப்பு, வேலைவாய்ப்பு, கல்வி, வேலை வாழ்க்கை சமநிலை, குடிமை நிச்சயம் என பல அடிப்படை தேவைகள் இன்றியமையாதவை. இப்படி தரமான வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்து தேவைகளும் சிறந்த முறையில் கிடைக்க கூடிய சிறந்த இடமாக கனடா விளங்குகிறது.

பணம் மட்டும் வாழ்க்கையின் தேவையை பூர்த்தி செய்திட முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. கனடாவில் 15 வயது முதல் 64 வயதினரின் 72 சதவீதத்தினர் பணியுடையவர்கள்.

சிறப்பான கல்விஅறிவுள்ள சமூகம் சிறந்த சமூகமாக விளங்குகிறது, இவ்வகையில், கனடாவில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் உயர்கல்வி முடித்தவர். இதில் ஆண்களை விட பெண்களே அதிகம் உயர்கல்வி பயின்றவர்கள்.

கனடாவின் தனிமனித எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலம் 82 வருடங்கள் ஆகும்.

இங்கு சுற்றுசூழல் மாசு மிக குறைவாக உள்ளது, மேலும் 90 சதவீத மக்கள் தாங்கள் பயன்படுத்தும் குடிநீரின் தரம் திருப்திகரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடாவில் வாழும் மக்களின் தரம் வருடா வருடம் உயர்ந்து வருவதாகவும் கணக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் இங்கு வாழ்வாதாரத்திற்கு தேவையான அத்தனையும் சிறந்த முறையில் கிடைப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனாலேயே கனடா உலகில் இரண்டாம் சிறந்த நாடாக தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும், வாழ்க்கை தரத்திற்கு உலகில் தலைசிறந்த நாடாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு