செய்தி விவரங்கள்

ஸ்ரீலங்காவில் மனித உரிமை ஆர்வலர்கள் பின்னால் புலனாய்வு பிரிவு தொடர்கிறது

ஸ்ரீலங்காவில் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு அரச புலனாய்வுப் பிரிவினரால் தொடர்ந்தும் அச்சுறுத்தல் காணப்படுவதாக தேசிய மீனவ ஒத்துழைப்பு அமைப்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளுக்கு எதிராக இனவாதிகளால் முன்னெடுக்கப்படுகின்ற தடை முயற்சிகளுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் அச்சமடைந்து அந்த பணிகளில் இருந்து தற்போது பின்வாங்கியிருப்பதாகவும் அந்த அமைப்பு கூறுகின்றது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 36ஆவது மாநாடு ஜெனீவாவில் நடைபெற்றுவரும் நிலையில் ஸ்ரீலங்காவின் மனித உரிமை நிலைமை குறித்த அறிக்கை ஒன்றை 90க்கும் மேற்பட்ட அமைப்புக்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இந்த அறிக்கை தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய தேசிய மீனவ ஒத்துழைப்பு அமைப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹேர்மன் குமார “அமைப்புகளாக கூடும்போது ஏற்படுகின்ற தடைகள் குறித்து எமது அறிக்கையில் கூறியுள்ளோம். விசேடமாக மனித உரிமை ஆர்வலர்களுக்குப் பின்னால் இன்னமும் அரச படையினர் மற்றும் உளவுப் பிரிவினர் பின்தொடர்கின்றனர். விவசாயிகள், மீனவர்கள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு இது மிகப்பெரிய இடையூறுாக உள்ளது. அவர்கள் ஒன்றுகூடுகையில் பேசுகையில், அழுத்தங்கள் கொடுக்கையில் குறைந்த பட்சம் கடிதமொன்றையாகிலும் எழுதுகையில் முன்பிருந்ததைப் பார்க்கிலும் குறைந்தளவேனும் பயம் தற்போது காணப்படுகின்றது. புதிய அரசியலமைப்பு பற்றி பேசுகின்றனர். ஆனால் புதிய அரசியலமைப்புக்கு எதிராக சக்திகள், இதற்கு எதிராகவும், சமஸ்டி ஊடாக வடக்கை புலிகளுக்கு தாரைவார்க்கப் பார்க்கின்றனர் என்றும் இனவாதிகள் குரல் கொடுத்து வருகின்றனர். எனவே ஜனாதிபதியும், அரசாங்கமும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளில் இருந்து பின்வாங்குகின்றனர். அதனூடாக 13ஆவது திருத்தத்தை சுயேட்சையாக அமுல்படுத்தாமல் இருந்தாலும் அதிலிருக்கும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களையாவது வழங்குவதற்கு அவர்கள் தயாராக இல்லை” என்றார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு