செய்தி விவரங்கள்

தொழில் முயற்சியாண்மைக்கான அதிகாரசபை

தேசிய சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைக்கான கொள்கை ஒன்றையும் தேசிய சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைக்கான அதிகாரசபை யொன்றையும் அமைப்பதற்கான முயற்சியில் தேசிய கைத்தொழில் அபிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மாக்கந்துறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இன்கியுபேட்டர் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றல் இயந்திர மத்திய நிலையம் அங்குரர்ப்பண விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து பொருளாதார மற்றும் கைத்தொழில் மறுசீரமைப்பில் பாரிய திட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.

இந்த அபிவிருத்தி இலக்கில் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மையானது மூலோபாயத்துறையாக கருதப்படுகின்றது.

பொருளாதார வளர்ச்சி, பிராந்திய அபிவிருத்தி, இளைஞர் வேலைவாய்ப்பு. வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் இதுபாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பூகோளமயமாக்கலின் வளர்ச்சி மாற்றம் அபிவிருத்தியின் நவீன போக்குக்கேற்ப அதிகரித்து வருகின்றது.

ஸ்ரீலங்காவில்  தேசிய சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைக் கொள்கையின் திட்ட வரைபுகள் தனது அமைச்சினால் உருவாக்கப்பட்டு, அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றிருப்பது மகிழ்ச்சி தருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு