செய்தி விவரங்கள்

மஹிந்த கூறினால் மக்கள் தென்னை மட்டைக்கும் வாக்களிப்பார்கள்;பந்துல

மஹிந்த கூறினால் மக்கள் தென்னை மட்டைக்கும் வாக்களிப்பார்கள்;பந்துல

கடந்த மூன்று வருடங்களாக நாட்டை சீரழித்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு மீண்டும் ஸ்ரீலங்காவை வழங்கினால் நாடு குட்டிச்சுவராகப் போவது உறுதியென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணி தெரிவிக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தென்னை மட்டைக்கு வாக்களிக்குமாறு கூறியிருந்தால் அதற்கும் வாக்களிப்பதற்கு ஸ்ரீலங்கா மக்கள் தயாராகவே இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, பல்லாண்டுகள் பழைமைவாய்ந்த கட்சிகளை தோற்கடித்து உருவாக்கப்பட்டு குறுகிய காலத்தைக் கொண்ட மொட்டுக்கட்சி ஸ்ரீலங்கா அரசியல் களத்தில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவித்தார்.

 “மஹிந்த ராஜபக்ச தென்னை மடைக்கு வாக்களிக்குமாறு கூறியிருந்தால் அதற்கும் வாக்களிப்பதற்கு தயாராகவே மக்கள் இருந்தார்கள். மஹரகம தொகுதியில் மொட்டு இல்லாததினால் மோட்டார் சைக்கிளுக்கு வாக்களிக்குமாறு மஹிந்த ராஜபக் கூறியதால் அதற்கு வாக்களித்தார்கள். அதேபோலதான் வேறு சில இடங்களில் பாம்பு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கோரப்பட்டதால் அதற்கும் வாக்களித்தார்கள்.

ஸ்ரீலங்கா வரலாற்றில் 70,65,50 ஆண்டுகள் பழைமைவாய்ந்த அரசியற் கட்சிகளை தோற்கடித்து ஒரு வருடமும் 3 மாதங்களையும் கொண்ட மொட்டுக் கட்சி கட்சி கிளைகள், அமைப்பாளர்கள்கூட இன்றி மக்களின் ஆணையைப் பெற்று அரசியல் உலகில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி பொருளாதாரத்தை சீரழித்துவிட்டதாகவும், பெப்ரவரி 10ஆம் திகதி நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். 3 வருடமாக சீரழித்த பொருளாதாரத்தை அவரால் மீண்டும் கட்டியெழுப்ப முடியுமா? இப்போது ஐக்கிய தேசியக் கட்சி தனிவழியில் செல்வதாக கூறுகிறது. அப்படியாயின் கலாசாரம் தொட்டு சமூகம் வரை சீரழிவுகளே ஏற்படும்.

பெண்களுக்கு மதுக்கடையில் தொழில், ஓரின சேர்க்கையாளர்களுக்கு சட்ட அங்கீகாரம் போன்றன அமைச்சர் மங்கள சமரவீரவினால் மேற்கொள்ளப்பட்டுவிடும். இப்படியான அழிவுக்கு நாடு செல்வதால் உணர்வடைந்த மக்கள் அரசாங்கத்திற்கு சிவப்பு எச்சரிக்கையை கொடுத்து அவர்களைத் தோற்கடித்தனர்” என்றார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு