செய்தி விவரங்கள்

யானையின் அட்டகாசம் வாழைத் தோட்டம் சேதம்...........!

யானையின்  அட்டகாசம்  வாழைத் தோட்டம் சேதம்...........!

நிந்தவூர் அல்லிமுல்லை பிரதேசத்தில் உள்ள வாழைத் தோட்டம் ஒன்றிற்குள் உட்புகுந்த காட்டு யானை ஒன்று அங்கிருந்த சுமார் ஆயிரத்து ஐநூறு வாழை மரங்களை சேதப்படுத்தி நாசம் விளைவித்துள்ளது.

இந்த சம்பவம் நேற்றையதினம்(16-04-2018) ஞாயிற்றுகிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

தோட்டத்துக்குள் உட்புகுந்த யானையை விரட்டுவதற்காக பொது மக்களும், வனவிலங்கு அதிகாரிகளும் எடுத்த முயற்சிகள் எவ்வித பயனும் அளிக்கவில்லை.

இந்நிலையில் யானையை விரட்ட பொலிஸாரும் முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது கைகூடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் யானையை விரட்ட எடுத்த நடவடிக்கையின் போது 3 பொது மக்களும் வனவிலங்கு அதிகாரி ஒருவரும் காயப்பட்டு மட்டக்களப்பு, மற்றும் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தோட்டச் சொந்தக்காரர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடா்பில் வாழைத் தோட்ட உரிமையாளர் கருத்துத் தெரிவிக்கையில்.....

நான்கு வருடங்களுக்கு முன்னர் 800 வாழைக்குட்டிகள் நட்டதாகவும் அது தற்போது 2000 ஆக பெருகியுள்ளதாகவும், இதில் மூன்றில் இரண்டு பங்கு சேதமடைந்துள்ளதாகவும், தினந்தோறும் சுமாா் 5000.00ரூபா வரை வருமானம் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு