செய்தி விவரங்கள்

சமூக வலைத்தளங்கள் மீதான தடை; இலங்கை வரும் பேஸ்புக் நிறுவனக் குழு!

சமூக வலைத்தளங்கள் மீதான தடை;  இலங்கை வரும் பேஸ்புக் நிறுவனக் குழு!

பேஸ்புக் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு பேஸ்புக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் சிலர் இலங்கை வர இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இனவாதம், மதவாதத்தை பரப்பும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து பதிவுகளையும் பேஸ்புக் நிறுவனத்தினால் நீக்குவதற்காக பேஸ்புக் நிறுவனம் இலங்கை அரசாங்கத்திற்கு உதவ முன்வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் காலங்களிலும் இந்த முறையான பதிவுகளை தானாகவே நீக்கும் முறையை செயற்படுத்த உதவுவதாக பேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சிங்கள மொழியில் உள்ள பதிவுகளை நீக்குவதற்காக எடுத்து கொள்ளப்பட்ட காலம் அதிகமாக கடந்துள்ளமையினால், தற்போதைய நிலைமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் பேஸ்புக் நிறுவனம் வருத்தம் வெளியிட்டுள்ளது.

ஏனைய வளர்ச்சியடைந்துள்ள நாடுகளுக்காக வழங்கப்பட்டுள்ள வசதிகளை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்தினால் பேஸ்புக் நிறுவனத்திடம் கோரிக்கைக்கு விடுக்கப்பட்ட  நிலையில் அதற்கான சிறந்த பதில் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இதனடிப்படையில் பேஸ்புக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் சிலர் இலங்கை வர இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு