செய்தி விவரங்கள்

பதுளையில் பொலிஸார் மீது சரமாரியான கல்வீச்சு தாக்குதல்;ஒருவர் படுகாயம்

பதுளையில் பொலிஸார் மீது சரமாரியான கல்வீச்சு தாக்குதல்;ஒருவர் படுகாயம் 

ஊவா மாகாணம் – பதுளை - பஸ்ஸர, எல்பெட் தோட்டத்தில் பிரவேசித்த பொலிஸார் மீது இனந்தெரியாத கும்பல் நடத்திய கல்வீச்சுத் தாக்குதலில் பொலிஸ் அதிகாரியொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றதாக ஆகரதென்ன பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ்ஸர, எல்பெட் தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபான உற்பத்திகளும், விநியோகமும் இடம்பெற்று வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

இதனையடுத்து சுற்றிவளைப்பை மேற்கொள்வதற்காக பொலிஸ் விசேட குழுவொன்று குறித்த தோட்டத்திற்கு விரைந்துள்ளது.

பொலிஸார் வருவதை அவதானித்துள்ள கும்பலொன்று அவர்கள் மீது சரமாரியான கல்வீச்சுத் தாக்குதலை நடத்தியிருக்கிறது.

இந்தத் தாக்குதலினால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஆகரதென்ன பொலிஸார் குறிப்பிட்டனர்.

எதிர்பாராத நிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக சுற்றிவளைப்பை கைவிட்டு பொலிஸ் நிலையத்திற்கு அதிகாரிகள் திரும்பியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

பொலிஸார் மீது சுமார் 40க்கும் மேற்பட்டவர்கள் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டிருந்ததாக சம்பவ இடத்திலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் ஆகரதென்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு