செய்தி விவரங்கள்

மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த பாரிய ஆயுத கிடங்கை அகற்றிய இராணுவம்!

மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த பாரிய ஆயுத கிடங்கை அகற்றிய இராணுவம்!

வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த இராணுவத்தினரின் பாரிய ஆயுத கிடங்கு அங்கிருந்து அகற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வலிகாமம் வடக்கில் கடந்த 13 ஆம் திகதி 683 ஏக்கர் காணி மீள்குடியேற்றத்திற்காக வழங்கப்பட்டது.இந்நிலையில் மயிலிட்டி வடக்கில் அமைந்தித்திருந்த இராணுவ ஆயுத கிடங்கு மற்றும் அதனுடன் இணைந்த கட்டடங்கள் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்படுகிறது.

இந்நிலையில் அங்கு பொருத்தப்பட்ட கூரையின் இரும்புக் கேடர்களை இராணுவத்தினர் வாகனங்களில் எடுத்துச்செல்கின்றனர்.

மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த பாரிய ஆயுத கிடங்கை அகற்றிய இராணுவம்!

அத்துடன் ஆயுதக் கிடங்கினை சுற்றிவர உயரமாக அமைக்கப்பட்டிருந்த மண் அணைகளும் அகற்றப்படுகிறது. மேலும் சிறு வெடிபொருட்களின் வெற்றுப் போத்தல்கள் பெருமளவில் உரைப்பையினுள் வைத்திருந்தனர் இவைகளும் அங்கிருந்து அகற்றப்பட்டு வருகிறது.

இதேவேளை மயிலிட்டி மக்களின் காணிகள் விடுவிக்கக்கூடாது அங்கு இராணுவத்தினரின் ஆயுதக் களஞ்சியம் அங்கு உள்ளது என தேசிய போர் வீரர்கள் முன்னணி அமைப்பு 2016 இல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியிருந்தது.

எனினும் இதனை ஜனாதிபதி மறுத்ததுடன் மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த பாரிய ஆயுத கிடங்கை அகற்றிய இராணுவம்!

மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த பாரிய ஆயுத கிடங்கை அகற்றிய இராணுவம்!

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு