செய்தி விவரங்கள்

சமூக வலைத்தளம் மீதான தடைக்கு எதிராக பொங்கியெழுந்த சர்வதேசம்!

ஸ்ரீலங்காவில் கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் முடக்கியதற்கு எதிராக உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேசத்திலிருந்தும் எதிர்ப்பலைகள் எழும்பியுள்ளன.

எனினும் இந்த தற்காலிகத் தடையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை அகற்றவிருப்பதாக டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்திருக்கின்றார்.

இருந்த போதிலும் சமூக வலைத்தளங்கள் மீதான இந்த நீண்டநாள் தடையானது சர்வதேச அரங்கில் ஸ்ரீலங்கா மீது உள்ள நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுகின்ற விடயமாகும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளம் மீதான தடைக்கு எதிராக பொங்கியெழுந்த சர்வதேசம்!

ஸ்ரீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ஹத்துல் கேஷாப் தனது ருவிட்டர் தளத்தில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்காவுடன் சர்வதேச அரங்கில் இருப்பவர்கள் தொடர்புகொள்கின்ற ஒரேயொரு வழியாக சமூக வலைத்தளம் காணப்படுகின்ற நிலையில் அதன் மீது இவ்வாறு விதிக்கப்பட்டுள்ள நீண்டநாள் தடையானது எவ்வகையிலும் ஏற்கமுடியாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளம் மீதான தடைக்கு எதிராக பொங்கியெழுந்த சர்வதேசம்!

இதேவேளை முகப்புத்தகம் உட்பட சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை அரசாங்கம் உடனடியாக இரத்து செய்ய வேண்டுமென மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் மெகா பொலிஸ் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

பல்வேறு வணிக செயற்பாடுகள், கல்வி நடவடிக்கைகள் உட்பட பல விடயங்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக செய்கின்ற தரப்பினருக்கு இந்த தடை உத்தரவானது பெரும் நட்டத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சமூக வலைத்தளம் மீதான தடைக்கு எதிராக பொங்கியெழுந்த சர்வதேசம்!

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு