செய்தி விவரங்கள்

HIV கிருமிகளை ஊசி மூலம் பரப்பும் நாசக்கார கும்பல் - அதிச்சி தகவல்!

உலகளவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில வருடங்களாக கணிசமாக குறைந்து வருகிறது. மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வே இதற்கு முக்கியமான காரணமாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும், அரசாங்கமும் இதை கட்டுப்படுத்த பல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஒரு மிக பெரும் பிரச்சனை உலகலாவில் நடந்து வந்தது. அதன்படி, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதன் வலியை பிறர் உணர வேண்டும் என்பதற்காக திரையரங்களின் இருக்கைகளின் மீதும், நடன க்ளப்புகளிலும் ஊசியின் மூலம் நோயை பரப்புவதாக தகவல் பரவ தொடங்கின. பின்னர், பல ஆராய்ச்சிகளின்படி இதற்காக தனி சதிகார கும்பல் உலாவுவதாகவும், அவர்கள் தான் இந்த நோயை பரப்ப முயல்வதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.

பிறகு இந்த பேச்சுகள் குறைய தொடங்கின. தற்பொழுது மீண்டும் இது ஆரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காலிஃபோர்னியாவில் Gas Pumping Stationல் கைப்பிடியில் இவ்வாறான ஊசியை வைத்து, அதன் மூலம் நோய் தொற்றக்கூடிய வகையில் ஒரு கும்பல் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்ததையடுத்து, இதனை வீடியோ பதிவு செய்துள்ளார். மேலும் இது பற்றிய விசாரணை தீவிரமாக நடந்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு