செய்தி விவரங்கள்

15 வயதுச் சிறுவனொருவன் ஓட்டிச்சென்ற பென்ஸ் வண்டியொன்று சாலையில் புரண்டது

சாரதி அனுமதிப் பத்திரம் எதுவுமின்றி , ஒரு ஆடம்பர பென்ஸ் காரை   கொழும்பு வீதியில் ஓட்டிச்சென்ற  ஒரு15 வயதுச் சிறுவன்  விபத்தில் சிக்கியுள்ளான். பம்பலப்பிட்டியில்  உள்ள வஜிரா வீதியிலேயே இந்தக் கார்  விபத்துக்கு உள்ளாகி இருக்கின்றது .

கார் பலத்த சேதத்திற்கு உள்ளாகி  இருந்தாலும் , சிறுவனுக்கோ, பாதசாரிகளில் எவருக்கோ காயம் எதுவும் ஏற்படவில்லை . படு வேகமாக ஓட்டப்பட்ட இந்த வெள்ளை பென்ஸ் கார் , மின் கம்பம் ஒன்றில் மோதியுள்ளது.

உயர்மட்டத்தில் இருந்து  சிறுவனை விடுவிக்கும்படி ,  பல தடவைகள் தொலைபேசி அழைப்புகள்  பம்பலப்பிட்டிய பொலிஸ் நிலையத்துக்கு வந்திருந்தாலும் , சிறுவனை இவர்கள் விடுவிக்கவில்லை .

சிறுவனின் பெற்றோர்களிடம் இச் சிறுவன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளான் என்று அறியப்படுகின்றது

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு