செய்தி விவரங்கள்

இலங்கையில் முதன்முறையாக தேர்தலில் வெற்றிபெற்ற ஆதிவாசி பெண்

இலங்கையில் முதன்முறையாக தேர்தலில் வெற்றிபெற்ற ஆதிவாசி பெண்

இலங்கை அரசியல் வரலாற்றிலும், ஆதிவாசிகளின் வரலாற்றிலும் புதிய பக்கத்தை ஆரம்பித்து வைத்திருக்கின்றார் ஷிரோமாலா.

அம்பாறை மாவட்டம் தெஹியத்தகண்டிய – ஹேனானிகல வடக்கைச் சேர்ந்த 37 வயதுடைய டபிள்யூ.எம். ஷிலோமாலா, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு 1369 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றிருக்கின்றார்.

இலங்கையில் வாழ்கின்ற ஆசிவாசிகளின் 19ஆவது பரம்பரை தலைவரான ஊருவரிகயே வன்னில எத்தோ, தங்களது இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்றிருக்கின்றமை மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாக கூறியுள்ளார்.

இதுவரைக்காலமும் ஆதிவாசிகள் எதிர்கொள்கின்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. அவற்றை வேறு கட்சியினரை நாடிச் சென்று பேச்சு நடத்தியும் இதுவரை தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இன்றும் காணப்படுகின்றன. அந்த வகையில் கிடைத்திருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தை சரிவர பயன்படுத்துவோம் என்று தெரிவித்திருக்கின்றார்.

இதேளை வெற்றிபெற்ற வேட்பாளரான ஷிலோமாலா தனது வெற்றி தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், தம்மை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆதிவாசியினர் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதே பிரதான இலக்கு என்று குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் 25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதிகளவான பெண்கள் போட்டியிட்ட முதலாவது உள்ளூராட்சி சபைத் தேர்தல் இதுவாக கருதப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு