செய்தி விவரங்கள்

சைட்டத்திற்கு எதிரான வாகன பேரணி

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட வாகனப் பேரணி வவுனியாவில் இருந்து அனுராதபுரத்தை நோக்கிய பயணத்தையும் இன்று ஆரம்பித்துள்ளது. 

சைட்டத்திற்கு எதிரான மக்கள் அரண் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த வாகனப் பேரணி, இன்று வவுனியாவை சென்றடைந்திருந்தது. 

வவுனியா ஏ 9 வீதியில் உள்ள புதிய பேரூந்து நிலையம் முன்பாக காலை 10 மணிக்கு ஆரம்பித்த குறித்த வாகனப் பேரணி மன்னார் வீதி வழியாக குருமன்காடு சந்தியை அடைந்து வைரவபுளியங்குள் ஊடாகச் சென்று வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து. 

அங்கிருந்து ஏ 9 வீதி வழியாக அனுராதபுரம் நோக்கி சைட்டத்திற்கு எதிரான வாகனப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

தனியார் மருத்துவக் கல்லூரியான சைட்டத்தை நிறுத்து, இலவசக் கல்வியை சிதைக்காதே போன்ற வாசங்களுடன் மோட்டர் சைக்கிள்கள், கார்கள், முச்சக்கர வண்டிகளில் வருகைதந்த பலர் எதிர்ப்பு ஊர்வலத்தில் பங்குபற்றினார்கள்..

இந்தப் பேரணியில் வைத்தியர் சங்கம், மருத்துவ பீட மாணவர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு