செய்தி விவரங்கள்

அமெரிக்காவில் தனது தாய்க்கு பிரசவம் பார்த்து அசத்திய 12 வயது சிறுமி

ஜெஸீ எனும் சிறுமி அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி பகுதியை சேர்ந்தவர் . 12 வயதான ஜெஸீ தன் தாயின் பிரசவத்தைப் பார்க்க வேண்டும் என மருத்துவர்களிடம் தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மருத்துவர்கள் ஜெஸீயை அவரின் தாய்க்கு பிரசவம் பார்க்க வைத்துள்ளனர். ஜெஸீ தன் தம்பியை தன் கையாலேயே வெளியே எடுத்துள்ளார். தன் தம்பியை எடுக்கும் போது தன்னை அறியாமலேயே அழுதுள்ளார்.

இதுகுறித்து பேசிய ஜெஸீ, “இது என் வாழ்நாளில் மிகச்சிறந்த தருணம். தம்பியை முதலில் பார்க்கும் போது நான் அழுதுவிட்டேன்.” என பிரமிப்பு குறையாமல் கூறியுள்ளது குறிப்பிடதக்கது.

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு