செய்தி விவரங்கள்

லண்டனில் ஒரே அறையில் 42 சடலங்கள் மீட்பு! அதிகாரபூர்வ அறிவிப்பு?

கடந்த, 14ம் தேதி, இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள, 'கிரீன் பெல் டவர்' என்ற, 24 மாடி குடியிருப்பில், தீ விபத்து ஏற்பட்டது. இரண்டு நாட்கள் போராட்டத்துக்கு பின், தீ அணைக்கப்பட்டது. 58க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கட்டடத்தின் நான்காவது தளத்தில் உள்ள ஒரு வீட்டில், பழுதடைந்த பிரிட்ஜில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக பற்றிய தீ, 5 நிமிடங்களுக்குள் கட்டடத்தின் மேல் தளங்களுக்கு வேகமாக பரவியது. 24 மாடி கட்டமும், தீயால் சூழப்பட்டது, பார்ப்போரை அதிர்ச்சி அடைய வைத்தது.

கட்டடத்தின் வெளிப்புற சுவரை அலங்கரிக்க, 'பாலியுரித்தேன்' அட்டைகளை கொண்ட அலுமினியம் காம்போசிட் பலகைகள் பதிக்கப்பட்டதே, தீ வேகமாக பரவ முக்கிய காரணம் என, அந்நாட்டு வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் நபர் ஒருவர் யூ டியூபில், 'கிரீன் பெல் டவரில் நடந்த தீ விபத்தின் போது, 42 உடல்கள் ஒரே அறையில் இருந்ததாகவும், அதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் இருந்ததாகவும், ஆனால் அவர்கள் அனைவரும் அடையாளம் காணப்படமுடியாத நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளார். இது குறித்து கூறிய நபரின் சகோதரர் அங்கு தீயணைப்புத் துறையில் வேலை செய்து வருவதாக பிரபல ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. தீ விபத்தில் சிக்கிய உடல்களை தேடும் பணியில் தீயணைப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு