செய்தி விவரங்கள்

பல்கேரியாவிலிருந்து ஸ்ரீலங்கா நாட்டவர்கள் 32 பேர் நாடு கடத்தப்பட்டனர்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பல்கேரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ஸ்ரீலங்கா நாட்டவர்கள் 32 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இதற்கமைய விசேட விமானம் மூலம் நேற்றைய தினம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இவர்கள் வந்தடைந்துள்ளனர்.

இத்தாலிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி துருக்கிக்கு அழைத்துச் சென்று கைவிடப்பட்ட நிலையில் இவர்கள் மீண்டும் இத்தாலிக்கு செல்லும் நோக்கில் பல்கேரியாவிற்குள் பிரவேசித்துள்ளனர்.

இந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து இவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு