செய்தி விவரங்கள்

ஒரு தகவலுக்கு ஒரு லட்சம் - உத்தரபிரதேச அரசு அதிரடி!!

தாயின் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைக் கூறும் சோதனை மையங்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வெகுமானம் வழங்கப்படும் என உத்திரப்பிரதேச மாநில அரச அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் 1000 ஆண்களுக்கு, 903 பெண்களே இருப்பதாக பாலின விகிதத்தில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து பெண் குழந்தைகளை சிசுவிலேயே ஒழிக்க உதவியாக உள்ள சோதனை மையங்களை ஒழித்துக்கட்ட அம்மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.

கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூறும் சோதனை மையங்கள் குறித்து தகுந்த ஆதாரங்களுடன் கூறும் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.1 லட்சமும், அவருக்கு உதவியாக செல்பவர்களுக்கு ரூ.40 ஆயிரமும் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளத. கர்ப்பிணி அல்லாத பிறர் மேற்கண்ட சோதனை மையங்கள் குறித்து தகவல் அளித்தால் அவர்களுக்கு ரூ.60 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு