செய்தி விவரங்கள்

காதலுக்கு எதிர்ப்பு ; பெற்ற மகளை எரித்துக்கொண்ட தகப்பன்- கர்நாடகாவில் பயங்கரம்.!

கர்நாடக மாநிலம் மைசூர் 'ஹெச்டி கோட்டே' தாலுக்காவை சேர்ந்தவர் குருசித்தேகௌடா. இவரது மகள் ஷோபா (19). இழர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கிருஷ்ணா எனும் இளைஞர் காவல் துறையில் ஓர் புகார் அளித்துள்ளார். அதில், நானும், ஷோபாவும் காதலித்து வந்தோம். ஆனால் நான் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் எங்கள் காதலுக்கு ஷோபாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஷோபாவை மேலூர் கிராமத்தில் சந்தித்து பேசினேன். அப்போது எங்களை அவரது தந்தை குருசித்தேகௌடா பார்த்து விட்டார். பின்னர் அவரும் அவருடன் இருந்த 4 பேரும் சேர்ந்து எங்களை கடுமையாக தாக்கினர். பின்னர், ஷோபாவை கொன்றுவிடுவதாக கூறி அவ்விடத்திலிருந்து இழுத்து சென்றார். அதன் பிறகு நானோ, ஷோபாவின் ஊர்காரர்களோ ஷோபாவை பார்க்கவில்லை.

மேலும், மகளை தீவைத்து எரித்து புதைத்து விட்டதாக ஷோபாவின் தந்தை அனைவரிடமும் கூறி வந்துள்ளார். இதனால் வேற்று சாதியை சேர்ந்த என்னை ஷோபா காதலித்ததால், அவரது தந்தை அவரை கொன்றிருக்கலாம் என்று வெள்ளிக்கிழமை புகார் தெரிவித்துள்ளார்.

மகளை வேற்று சாதியை சார்ந்த ஒருவரை காதலித்த ஒற்றை காரணத்திற்காக, தகப்பனே கொன்றதாக வெளியாகியுள்ள செய்தி அப்பகுதியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு