செய்தி விவரங்கள்

$40,000 (ரூ. 25.79 லட்சம்) பரிசாக பெற்ற 12 வயது சிறுமி

அமெரிக்காவில் இடம் பெற்ற ஆங்கில சொற்களில் உள்ள பிழைநீக்கும் போட்டியில் இந்திய வம்சாவளியை ” சேர்ந்த அனன்யா வினய் ” என்ற 12 வயது சிறுமி முதலிடத்தை பிடித்துள்ளார். முதல் இடம் பெற்ற அனன்யா வினய்ற்கு $40000 டொலர் பரிசாக வழங்கப்பட்டது. 

இவர் 'Marocain’ (பட்டு அல்லது கம்பளியால் செய்யப்பட்ட துணி) என்ற வார்த்தைக்கு எழுத்து பிழை கண்டு பிடித்து, சரியான சொல்லை கூறி முதலிடம் பிடித்துள்ளார். வருடா வருடம் நடக்கும் இந்த போட்டியில் அதிகமாக இந்திய வம்சாவளியினர் வெல்வது தான் வழக்கமாக உள்ளது.

6 தொடக்கம் 15 வயதிற்க்கு உட்பட்ட சிறுவர்களிர்காக இடம்பெற்ற இந்தப்போட்டியில்  பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பத்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பங்குபற்றியது குறிப்பிடதக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு