செய்தி விவரங்கள்

கராத்தே சுற்றுப்போட்டியில் தங்கப்பதக்கங்களை வென்ற எக்ஸ்புளோரா !

வடமாகாண மற்றும் அகில இலங்கை ரீதியிலான கராத்தே சுற்றுப்போட்டியில்,  மானிப்பாயிலுள்ள  எக்ஸ்புளோரா (Xpllora)  கல்வி நிறுவனமானது  தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.

கராத்தே   சுற்றுப்போட்டியில்   தங்கப்பதக்கங்களை  வென்ற  எக்ஸ்புளோரா    !

இலங்கை கராத்தே சம்மேளனம் நடாத்திய, தேசிய மட்ட கராத்தே தொடரில் ஒரு தங்கப்பதக்கமும், வட மாகாண கராத்தே சுற்றுப்போட்டியில் மூன்று, தங்கப்பதக்கங்களும், மானிப்பாயிலுள்ள  எக்ஸ்புளோரா (Xpllora)  கல்வி நிறுவனத்திற்கு  கிடைத்துள்ளன.

கொழும்பு சுகததாச உள்ளரங்கில் இடம்பெற்று வருகின்ற, 42 வது தேசிய கராத்தே சுற்றுப்போட்டியி்ல், நவாலியைச் சேர்ந்த, சுப்பிரமணியம் ரஞ்சித் என்ற  ஆசிரியரின் பயிற்சியின் கீழ், மாணவர்களான ஜே. தழிழ்ச்செல்வன் தங்கப்பதக்கத்தினையும், உ. நவீன் மற்றும் ச. சங்கீர்த்தன் ஆகியோர்  சிறந்த வீரர்களாகவும் கராத்தே போட்டியில் தெரிவு செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு