செய்தி விவரங்கள்

கூட்டமைப்பு பொறுப்புக் கூற வேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு

தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற அநீதிகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொறுப்புக் கூற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பு பொறுப்புக் கூற வேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு

 மக்கள் நலனில் சிந்தித்து செயற்படும் ஒரு தலைமை உருவாகும் பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மீண்டும் இணைந்து செயற்படுவது தொடர்பில்  தீர்மானத்தை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

 உள்ளுராட்சி சபை தேர்தலின் பின்னர் தென்பகுதியில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைமை காரணமாக தமிழ்தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் ஒன்றிணையவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

 இந்த கோரிக்கை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகங்களுக்கு பதிலளிக்கும் போதே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பவலம் இதனை தெரிவித்துள்ளார்.

 இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் மாற்றம் ஏற்பட்டும் பட்சத்தில் அதனுடன் இணைந்து பயணிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தமை அரசியல் நாகரீகமற்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு