செய்தி விவரங்கள்

கோபா டெல் ரே போட்டியில் பார்சிலோனா காலிறுதிக்கு முன்னேற்றம்

கோபா டெல் ரே போட்டியில் பார்சிலோனா காலிறுதிக்கு முன்னேற்றம்


கோப் டெல் ரே கால்பந்து போட்டியில் மெஸ்சியின் அதிரடி ஆட்டத்தால் பார்சிலோனா அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

கோபா டெல் ரே கால்பந்து போட்டிகளுக்கான் காலிறுதிக்கு முன்னைய 2 போட்டிகளில் பார்சிலோனா அணியும் செல்டா விகோ அணியும் மோதியுள்ளன. விறுவிறுப்பாக நடைபெற்ற முதலாவது போட்டியில் செல்டா விகோ மைதானத்தில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களை போட்டுள்ளன.

இதனடிப்படையில் இன்று பார்சிலோனா அணி மைதானத்தில் மீண்டும் 2 ஆவது போட்டியில் பார்சிலோனா மற்றும் செல்டா விகோ அணிகள் மோதியுள்ளன. விறுவிறுப்பாக நடைபெற்ற 2 ஆவது போட்டியில்  முதல் பாதி ஆட்டத்தில் மெஸ்சியின் 2 கோல்களுடன் 4 கோல்களை போட்டு பார்சிலோனா அணி முன்னிலை பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து இடம்பெற்ற இறுதிப்பாதி ஆட்டத்திலும் பார்சிலோனா அணி 1 கோலை போட்டு 5 ற்கு 0 என்ற கணக்கில் செல்டா விகோ அணியை வெற்றிபெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு