செய்தி விவரங்கள்

3 ஆவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாபே துடுப்பெடுத்தாட்டம்!

3 ஆவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாபே துடுப்பெடுத்தாட்டம்!


ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாபே அணிகள் மோதும் 3 ஆவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாபே அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாபே அணிகள் 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரிலும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகின்றது. இதனடிப்படையில் ஏற்கனவே நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 9 ஆம் திகதி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், 11 ஆம் திகதரி நடைபெற்ற போட்டியில் ஜிம்பாபே அணியும் வெற்றி பெற்றுள்ளன. இதனை தொடர்ந்து இன்று 3 ஆவது ஒருநாள் போட்டி ஷார்ஜா மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இன்று ஆரம்பமான போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாபே அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்து களமிறங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு