செய்தி விவரங்கள்

வருத்தமின்றி கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் இந்தியா வீரர்!

வருத்தமின்றி கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் இந்தியா வீரர்!


இந்தியா வீரர் யுவராஜ் சிங் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

வருத்தமின்றி கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் இந்தியா வீரர்!

இந்தியா அணியின் மூத்த வீரர்களில் ஒருவராக 36 வயதில் யுவராஜ் சிங் காணப்படுகின்றார். இவர் இறுதியாக கடந்த வருடம் ஜீன் மாதம் மேற்கிந்தியா அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி சார்பில் விளையாடியுள்ளார். ஆனால் அதற்கு பின் இதுவரை இந்தியா அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா? என எதிர்பார்த்து காத்திருக்கின்றார்.

இந்நிலையில் வாய்ப்புக்கள் கிடைப்பதற்கு சந்தர்ப்பம் இல்லாத காரணத்தால் வருத்தமின்றி ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் புற்றுநோயில் இருந்து மீண்டு இந்தியா அணிக்காக பல சாதனைகளை நிலைநாட்டிய வீரர் என்ற பெருமைக்குரிய யுவராஜ் சிங், இனிவரும் காலங்களில் புற்றுநோய் அறக்கட்டளை நிறுவனத்தையும் மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வுகளையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு